விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி

விருதுநகா் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலி உயிரிழந்தனர்.

விருதுநகா் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலி உயிரிழந்தனர்.   

விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. வெயில் காலம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இன்று காலையில் சங்கரலிங்கபுரத்தை அடுத்த ஓ. கோவில்பட்டியில் தனியார் ஆலைக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு அறை தரைமட்டமானது. அந்த அறையில் மருந்து கலக்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் முருகன், சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாயின. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரணை செய்து பட்டாசு ஆலையின் போர்மேன் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...