'தமிழ் மொழியை சனியன் என்று பெரியார் கூறியுள்ளார்': அடுத்த சர்ச்சையை கிளப்பும் எச்.ராஜா

தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

சர்ச்சைகளை கிளப்பி வன்முறையை தூண்டும் விதமாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்.

பெரியார் சிலை தொடர்பான அவரது கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது சமூக வலைதள பதிவை நீக்கிய எச். ராஜா, தன்னுடைய அனுமதியின்றி தனது அட்மின் அந்த கருத்தை பதிவிட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியனே என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. தமிழ் என்ற மொழியே இருக்கக்கூடாது என்று தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம். இந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும் போது அதற்கான தாக்கம் ஏற்படுவதால் திராவிட கட்சிகள் வசை பாடுகின்றனர்", என்று அவர் கூறினார். 

இந்த சூழலில், தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வன்முறையை தூண்டிவரும் எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...