பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேருக்கு 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

கோவை சித்தாப்புதூர் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் மீது நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். 

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்ததையடுத்து, அக்காட்சிகளைக் கொண்டு காட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உறுப்பினரான கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவர் காவல்நிலையத்தில் சரணடைய வந்தபோது வழியிலேயே காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிங்காநல்லூரை சேர்ந்த தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாநகர் அமைப்பாளரான ஜீவானந்தம், ஜீவானந்தத்தின் நண்பரும் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் உறுப்பினருமான கவுதம் என்பவரும் சம்பவத்தில் தொடர்பிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, ஜீவானந்தத்தை சின்னதடாகம் அருகில் கைது செய்தனர். 

கவுதம் வழக்கறிஞர்களுடன் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் சரணடைந்தார். சொத்துக்களை சேதப்படுத்துவது, ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தீவைப்பது, இரு பிரிவினருக்கிடையே பகை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது என இந்திய தண்டனைச் சட்டங்கள் 427, 285, 153A ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள நீதிபதி குடியிருப்பில் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமாரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்ந்து, அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...