குட்டையில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த பெருமாள், ஜெயா ஆகியோரின் மகன் ஆனந்தன் (40) என்பவர் பல்லடம் அருள்புரம் பாச்சாங்காட்டுப்பாளையம் ஜி.பி தோட்டத்தில் ஒருவருடமாக தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்கு விட்டில் இருந்து  வெளியே சென்றவர், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக அவரைத் தேடி வந்த நிலையில், இன்று காலை பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டை தண்ணீரில் ஆனந்தனின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது. 

இதனைக் கண்ட பொதுமக்கள் ஆனந்தனின் வீட்டிற்கும், பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆனந்தனின் சடலத்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...