மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி

உதகையில் உள்ள மகளிர் மேம்பாட்டு வணிக வளாகத்தில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

நீலகிரி: உதகையில் உள்ள மகளிர் மேம்பாட்டு வணிக வளாகத்தில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியில், பாரம்பரிய உணவுகளான சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு ஆகியவற்றைக் கொண்டு, சாமை எலுமிச்சை சாதம், வரகு பிரியாணி, சாமை தக்காளி சாதம், திணை சாம்பார் சாதம், முளைகட்டிய பயிர்களின் குருமா, நவதானிய குருமா, குதிரைவாலி பொங்கல் ஆகிய உணவுகளை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

"இத்தகைய சிறு தானியங்களைக் கொண்டு உணவு வகைகளைத் தயாரிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளை கவருவதுடன், அவர்களுக்கு நமது பாரம்பரிய உணவு பழக்கத்தை புதுப்பிக்க முடியும்" என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். 



தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன பயிற்சியாளர் ரெக்ஸ் வாஸ் கூறும் போது, "மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சிறு, குறு வியாபாரம் செய்யும் மகளிருக்கு பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வு மற்றும் செய்முறை பயிற்சி கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்றவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ‘பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி’ வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மகளிருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் பங்கேற்றவர்கள் மகளிர் தின விழாவில் பாரம்பரிய உணவகத்தை நடத்தவுள்ளனர்.’ என்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...