திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைப்பு- பாஜக பிரமுகரை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்...

திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


திருப்பத்தூர் : திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 



தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ, களவாணிகளைப் போல இரவில் உடைக்காமல் பகலில் நேரம் குறித்துவிட்டு வாருங்கள். கை கால்களை துண்டாக்குவோம் என எச்சரித்திருந்தார். 

இந்நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் இரவில் உடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.



அத்துடன் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும், ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகைக்கும் சிலைக்கும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.



இதனையடுத்து வந்த போலீசார் பாஜக நகர செயலாளர் முத்துராமன், பிரசன்னா ஆகியோர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...