குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

திருப்பூரில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 



பல்லடம் சாலை வீரபாண்டி பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில், குடியிருப்பு மிகுந்த பகுதியில் அமைக்கப்பட உள்ள செல்போன் டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது :- குடியிருப்பு மிகுந்த பகுதியில் செல்போன் டவரை அமைக்க கூடாது. செல்போன் டவர் அமைக்கும் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தனிநபர் லாபத்திற்காக பொதுமக்களை பாதிக்கும் இந்த டவர் அமைக்க அனுமதிக்கக் கூடாது. கட்டிடம் மிகவும் மோசமாக இருப்பதால் விபத்து ஏற்படுவதற்கு முன் செல்போன் டவர் அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...