ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மிகவும் முக்கியமானது அன்னூரில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மண்ணீஸ்வரர் ஆலயம். 

மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் பிரம்மா மற்றும் மார்க்கண்டேய முனிவர், வியாசகர் உள்ளிட்டவர்கள் இந்த சிவ ஆலயத்தில் வழிபாடு நடத்தியதாக வரலாறு உள்ளது.

பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் அறநிலையத்துறையின் சார்பில் சுமார் இரண்டு கோடி செலவில் ராஜகோபுர புணரமைப்பு மற்றும் வசந்த மண்டபம், நாயண்மார்கள் பிரதிஷ்டை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



கணபதி ஹோமத்துடன் துவங்கி ஜந்துகால பூஜைகள் நடத்தபட்டு ராஜகோபுரத்திற்கும் மண்ணீஸ்வரர் மற்றும் அருந்ததட்செல்வி தாயாருக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத யந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தபட்டு புனித நீர் பொதுமக்களுக்கு தெளிக்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு மண்ணீஸ்வரர் அருள்பெற்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...