மூன்றாண்டுகளில் 6,063 குழந்தைகள் மீட்பு - ரயில்வே கண்காணிப்பாளர்

தமிழக ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

உதயம் தன்னார்வலர்கள் மற்றும் ரயில்வே காவல் துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆட்டோ ஒட்டுநர்கள், கால் டாக்சி ஒட்டுநர்கள், லோடு மேன்கள் மற்றும் போட்டர்ஸ் ஆகியோருக்கு அடையாள அட்டைகள் இன்று கோவையில் வழங்கப்பட்டன. இந்த அடையாள அட்டைகளை 266 பேருக்கு ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் வழங்கினார்.

ரயில் நிலையத்தில் குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலோ அடையாள அட்டை உள்ளவர்கள் உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். இதனால் குழந்தைகள் கடத்தப்படுவது, பெருமளவு தடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஜோர்ஜி ஜோர்ஜ் பேசுகையில், "உலகில் குழந்தைகள் அதிகம் உள்ள நாடு இந்தியா. 18 வயதிற்கும் கீழ் உள்ள 45 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் உள்ளனர். குழந்தைகள் அனைவருக்கும் நல்ல கல்வி மற்றும் பாதுகாப்பு நாம் கொடுக்க வேண்டும். அது நம் கடமை. குழந்தைகள் தொலைந்து போனால் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையங்களுக்குத் தான் முதலில் அவர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் குழந்தைகளை பாதுகாக்க இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



குழந்தைகள் தனியாக வரும் போது சமூக விரோதிகளால் அவர்கள் கடத்தப்படும் வாய்ப்பு அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக ரயில் நிலையங்களில் 6 ஆயிரத்து 663 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 

கோவை ரயில் நிலையத்தை நூறு சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பு நிலையமாக மாற்ற முடியும். அதற்காக அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்." என்றார்.



இந்த நிகழ்ச்சியில் ரயில் நிலைய இயக்குநர் டி.சதிஷ் சரவணன், நிலைய மேலாளர் எல்.சின்ராசு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...