லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் உடல் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் தகனம்

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர், அரசு மரியாதையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர், அரசு மரியாதையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

குடும்ப நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். ஓட்டல் அறையின் குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர். 

விசாரணைக்கு பின்னர் நேற்று அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனையடுத்து, அவரது உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு தனிவிமானம் மூலம் நேற்றிரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட உடலைப் பார்த்த ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

பின்னர், அவரது உடல் அப்பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் வைக்கப்பட்டது. அங்கு, திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். மாநில அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்ட பின்னர், அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. மூவர்ணக்கொடி போர்த்தப்பட்ட அவரது உடல் வாகனத்தில் செல்ல, அதிகளவிலான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சோகத்துடன் பின்தொடர்ந்து வந்தனர்.

மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மின்சார மயானத்தை அவரது உடல் வந்தடைந்ததும் சம்பிராதயப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. மாலை சுமார் 6 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...