பத்மஸ்ரீ நானம்மாள் யோகா பாட்டிக்கு பாராட்டு விழா

98 வயதிலும் யோகாசனம் செய்து வரும் கோவையைச் சேர்ந்த பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டிக்கு கோவை மாநகரின் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை : 98 வயதிலும் யோகாசனம் செய்து வரும் கோவையைச் சேர்ந்த பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டிக்கு கோவை மாநகரின் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது.



கோவை கணபதியைச் சேர்ந்த நானம்மாள் பாட்டி எட்டு வயதாக இருக்கும் போது தன்னுடைய தந்தையிடமிருந்து யோகா கற்றுக்கொண்டார்.  அப்போது முதல் தற்போது வரை சுமார் 90 வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, பலருக்கும் யோகா கற்றுக்கொடுத்து வருகிறார்.



இதனிடையே, இவரின் இந்தத் திறமையும், சேவையும் பாராட்டி மத்திய அரசு இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கியுள்ளது. இது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற நானாம்மாள் பாட்டியை கவுரவிக்கும் வகையில் கோவை மாநகரின் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் பல்வேறு மகிளர் அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.



"ராகி, சாமை, கோதுமை, கம்பு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி போன்றவை தான் சாப்பிடுவேன். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து யோகாசனம் செய்வேன், பேரன், பேத்தி என அனைவருக்கும் யோகாசனம் சொல்லிக் கொடுப்பேன். பெண்கள் யோகா செய்தால் கை, கால் வலி வராது, சுகபிரசவம் ஆகும். அனைவரும் யோகா செய்தால் நலமுடன் வாழலாம்," என்றார் நானம்மாள். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக யோகா பாட்டி பத்மஸ்ரீ நானம்மாளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...