கணவர் மரணத்தில் மர்மம் : முறையாக விசாரணை நடத்தக்கோரி பெண் புகார்

கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர்: கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 



திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். லாரி ஓட்டுநர். இவர் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி குன்னத்தூர் பகுதியில் சீட்டு விளையாடச் சென்றதாகவும், அப்போது கிணற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இறந்துபோன குமாரின் மனைவி சித்ரா திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில் "என் கணவர் குமார் கடந்த 11-ம் தேதி புதிய லாரி வாங்குவதற்காக ரூ.2,40,000 பணம், 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றுடன் வீட்டிலிருந்து புறப்பட்டார். 

அவருடன் அவரது நண்பர்கள் ராஜ், சாமி, பிரகாஷ் ஆகியோரும் சென்றதாகவும். நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவருடைய செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் எடுக்கவில்லை. இந்த நிலையில்,12-ம் தேதி அவரது நண்பர் ராஜ் என்னை அழைத்து குமார் கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகக் கூறினார். 

இதுகுறித்து குன்றத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் தவமணி வழக்குப் பதிவு விசாரணை நடத்து வருகிறார். இறந்து போன எனது கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் கொண்டு போன பணம், நகை குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. அவரது நண்பர்களிடம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும். மேலும் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் தவமணி வழக்கை முறையாக விசாரிக்காததால் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...