எல்.ஜி.பி. நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கை கட்டுப்படுத்த வேண்டி ஆட்சியரிடம் மனு

கோவையில் இயங்கி வரும் எல்.ஜி.பி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யும் நிர்வாகத்தின் தொழிலாளர் வோரோதப்போக்கை கட்டுப்படுத்த அந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் இயங்கி வரும் எல்.ஜி.பி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யும் நிர்வாகத்தின் தொழிலாளர் வோரோதப்போக்கை கட்டுப்படுத்த அந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



கோவை வையம்பாளையத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பி ரோலான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மைசூரில் இயங்கி வரும் இதே நிறுவனத்தின் கிளையில் பணி புரிபவர்களுக்கு ரூ.8000 கூடுதலாக சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. அதேபோல் கோவையில் இயங்கும் நிறுவனத்திற்கும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவன ஊழியர் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இதனால் அவர் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பந்த் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

இந்த சூழலில், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பான்மையான ஊழியர்கள் ஏ.ஐ.சி.சி.டி.யூ. அமைப்பில் சேர்ந்துவிட்டனர் என்ற காரணத்தால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 6 பேரை பந்த நகருக்கு இடமாற்றம் செய்துவிட்டதாக கூறியும், பணி நீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...