ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் -விவசாயிகள் சங்கம்

ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " கோவை மாவட்ட விவசாயிகள் பலர் கால்நடைகளை வளர்த்து பால் கறந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தனியார் பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தீவனங்கள் கிடைக்க பெறுவதில் சிக்கல் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.20-லிருந்து ரூ.22 வரையும் தனியார் பால் வியாபாரிகள் ரூ.23-லிருந்து ரூ.25 வரையும் கொடுக்கின்றனர்.

சராசரியாக 1 லிட்டர் பாலின் உற்பத்திக்கு ரூ.20 ஆகும் நிலையில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேறவில்லை. மேலும் கொள்முதல் செய்யும் பாலின் விலையை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும்." என்றார். 



மற்றொரு மனுவில் விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்றும், அவ்வாறு விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பட்சத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் தென்னை மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உயர் மின் கோபுரங்கள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...