தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம்  நடைபெற்றது. 



பல்லுயிர்ப் பரவல் சட்டம் 2002, அணுகுதல் மற்றும் பங்கிடுதல் வழிமுறை தொடர்பான பயிலரங்கம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

இப்பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், " பல்லுயிர்ப்பரவல் பாதுகாப்பு, பயன்படுத்தும் அளவு மற்றும் செழுமை  மற்றும் உயிரின ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் பயன்களை சமபங்கிடுதல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தகவல்கள் பற்றி இச்சட்டம் வகை செய்கிறது. 

பல்லுயிர்ப்பரவல் பற்றிய பாரம்பரிய தகவல்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பல்லுயிர்ப்பரவல் உடன்பாடு 1992-ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி ரியோடி ஜெனிரோவில் நடந்த ஐக்கிய நாட்டு பல்லுயிர்ப்பரவல் மாநாட்டில் இந்திய கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 

மேலே கூறப்பட்ட இந்த பல்லுயிர்ப்பரவல் மரபு 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி கட்டாயப் படுத்தப்பட்டது. 

இந்திய அரசு மற்றும் ஜெர்மனியை அரசு ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் அணுகுதல் மற்றும் பங்கிடுதல் கூட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டம் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், உத்திரகாண்ட் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இந்த பயிலரங்கத்தில் தமிழ்நாடு வனஉயர் பயிற்சியக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் கேட் தவிவேதி, தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கூடுதல் இயக்குநர் திருநாவுக்கரசு,மற்றும் சுற்றுசூழல் அமைப்பு பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...