விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதி விபத்து.!

பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.


திருப்பூர் : பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.

வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சித்ரா(27). விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரது நிலைமை மோசமாகவே அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

அதன் பேரில் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்ஸ் கோடாங்கிபாளையம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில், அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்ற சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்கி ஆகியோர் படுகாயமடைந்தனர். 

விபத்தைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சித்ரா-வை வேறு ஒரு ஆம்புலன்சு மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...