சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் ரயில் பயணிகளுக்கு இலவச பேருந்து வசதியை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
கோவை: சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் ரயில் பயணிகளுக்கு இலவச பேருந்து வசதியை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைமேடை நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை முதல் மேட்டுப்பாளையம் வரையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கோவையோடு நிறுத்தப்படுகிறது. கோவை - மேட்டுப்பாளையம் இடையேயான ரயில்சேவை கடந்த 1-ம் தேதியுடன் ரத்து செய்யப்பட்டது. இதனால், சென்னை முதல் மேட்டுப்பாளையம் வரை ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை இலவச பேருந்து வசதியினை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இரவு 07:45 மணிக்கு புறப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் கோவை வழியாக மறுநாள் காலை 05:05 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 09:05 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 06:15 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். சென்னையில் இருந்து ஊட்டி செல்ல விரும்புவோர் இந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் மேட்டுப்பாளையம் வந்தடைந்த பின்னர், சுமார் ஒரு மணிநேர இடைவெளியில் இங்கிருந்து காலை 07:10 மணிக்கு ஊட்டி செல்லும் மலை ரயிலில் பயணிப்பது வழக்கம்.
இந்நிலையில், நாட்டின் மிகப் பழமையான [1882] ரயில் நிலைங்களில் ஒன்றான மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தின் நடைமேடை 14 பெட்டிகள் நிற்கும் அளவில் உள்ளதை 23 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு நீட்டிப்பு செய்யும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி ஒன்று முதல் மார்ச் மூன்று வரை மொத்தம் 31 நாட்கள் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை – மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு இவ்விரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இலவச பேருந்து வசதியினை வழங்கவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இயக்கப்பட்டு வரும் இலவச பேருந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், இவ்விரண்டு ரயில் நிலையங்களிலும் இதற்கான உதவி மையங்கள் செயல்படும் என்றும், விபரங்களுக்கு 90039 56955 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி நான்கு முறை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலும் கடந்த 1-ம் முதல் காரமடை ரயில் நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த ரயில் வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.