பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை: பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பேராசிரியர் நியமனத்திற்கு 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நேற்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சார்பாக ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுப்பில் உள்ளதை அடுத்து, அந்த நீதிமன்றத்தில் பொறுப்பில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அவர் நீதிமன்றத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்தார் .ஊடகங்களில் செய்திகள் வருவதால் சிறையில் மூத்த குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட கிடைக்கவில்லை என்றும், சிறையில் முதல்வகுப்பு அறை கிடைக்கும் வரை சுடுநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஏற்ற நீதிபதி, அவரது கோரிக்கைகளை காவல்துறையினரிடம் தெரியப்படுத்தியதோடு காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், துணை வேந்தருக்கு சிறையில் முதல்வகுப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அன்றைய தினமே விசாரிக்கப்படும் என்றார். பின்னர், பலத்த பாதுகாப்புடன் துணைவேந்தர் கணபதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட துணைவேந்தர் கணபதி ஊடகங்களை பார்த்து, எழுதும் போது மனசாட்சியுடன் எழுதுங்கள், எதை வேண்டுமானாலும் எழுத வேண்டும் என எழுதாதீர்கள், மனித தன்மையுடன் எழுதுங்கள் என ஆவேசமாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.