மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார் நடிகை ஸ்ருதி

திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ருதி மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை: திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ருதி மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலத்தைச் சேர்ந்த பால முருகன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 41 லட்சம் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து நடிகை ஸ்ருதி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. 

இதனிடையே நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள ஸ்ருதி உள்ளிட்ட 4 பேர் காவல் துறையினரைத் தாக்கிய வழக்கிலும், கடந்த 2016-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி ஸ்ருதி, சித்ரா ,பிரச்சன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் நடிகை ஸ்ருதியை நாகப்பட்டினம் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதற்கான உத்தரவைச் சிறையில் உள்ள நடிகை ஸ்ருதியிடம் போலீசார் வழங்கினர். இந்த வழக்கு தொடர்பாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் நாகப்பட்டினம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுவரை நடிகை ஸ்ருதி அடுத்தடுத்து 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...