மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யக் கெடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கீழ், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் 115 கடைகள் செயல்பட்டன. ஆயிரங்கால் மண்டபம் அருகே வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும் 86 கடைகள் இருந்தன. இங்கு கடை எண், 75, 76-ல் ஏற்பட்ட தீ விபத்தால், வீர வசந்தராய மண்டபம் இடிந்து விழுந்தது. பயங்கர தீ விபத்துக்கு காரணமான கடைகளை அகற்றக்கோரி, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் சங்கத்தினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மீனாட்சி கோயில் வளாகத்தில் செயல்படும் 115 கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும். உரிமையாளர்கள், தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் வைக்க வேண்டும். அதனையும், 3 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...