பல்லடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் போதகர் கிதியோன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம்: காஞ்சிபுரத்தில் போதகர் கிதியோன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் திருப்பூர் மாவட்ட தலைவர் தமிழ்முத்து தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் அடையாளச்சேரியில் போதகர் கிதியோனை படுகொலை செய்த மதவாத சக்திகளை கண்டித்தும், பல்லடம் சரகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவ ஆலயங்கள் தாக்கப்படுவது போன்ற செயல்களைக் கண்டித்து திருப்பூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை மற்றும் பல்லடம் சரகம் அனைத்து போதகர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தின் போது, சபை ஊழியர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், கொலைவெறித் தாக்குதல் மீதான நடவடிக்கை, சிறுபான்மையின மக்கள் மீதான மதரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதன்மை செயலாளர் பாவரசு, மாநில து. செயலாளர் கிப்டன் டேவிட்பால் உட்பட ஏராளமான நிர்வாகிகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...