கோவையில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தன. இதுவரை 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.



கோவை: கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தன. இதுவரை 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 




கோவை வனச்சரகப் பகுதிகளில் உள்ள 25 குளங்களில் வன அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சதுப்பு நிலங்களில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கின்றனர். இன்றும், நாளையும் நடக்கும் இந்தக் கணக்கெடுப்பில் பறவைகளின் இனங்கள் மற்றும் பறவைகளின் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. முதல் நாள் கணக்கெடுப்பின் போது, 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 48 இனங்கள் ஈரமான நிலத்தில் வாழ்பவையாகும். 78 இனங்கள் சதுப்பு நிலங்களில் வசிப்பவையாகும். அனைத்து குளங்களிலும் கணக்கெடுத்ததன் அடிப்படையில், முதல்நாளில் மட்டும் 6,620 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.




அதிகபட்சமாக அச்சன்குளம் குளப்பகுதியில் மட்டும் 75 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டன. இதேபோல, குறிஞ்சி குளப்பகுதியில் 884 பறவைகள் கணக்கிடப்பட்டன. 




முன்னதாக, இது தொடர்பான நிகழ்ச்சி தமிழ்நாடு வனத்துறை வளாகத்தில் நடைபெற்றது. அதில், பறவைகளை கணக்கெடுக்கும் தன்னார்வலர்களுக்கான விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணியின் நடுவே, சிறந்த புகைப்படங்களை எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...