ரூ. 73 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகளை தொடங்கி வைத்தார் எஸ்.பி. வேலுமணி

கோவை மாநகராட்சியின் 76-வது வார்டு பகுதியில் ரூ. 73 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியின் 76-வது வார்டு பகுதியில் ரூ. 73 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 

தெற்கு மண்டலம் 76-வது வார்டுக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் மற்றும் எம்.எம்.ஆர். கார்டன் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, வள்ளலார் நகர் மற்றும் குழந்தை நாயக்கர் வீதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 42 லட்சம் செலவிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையையும் அவர் ஆரம்பித்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர். 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...