திருப்பூரில் பள்ளிகளுக்கிடையேயான புத்தாக்க அறிவியல் கண்காட்சி தொடக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் புத்தாக்க அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி துவக்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் புத்தாக்க அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி துவக்கி வைத்தார்.

தாராபுரம் சாலை ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான புத்தாக்க அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அறிவியல் அறிவு ஒரு நாட்டின் செல்வ வளத்திற்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகும். நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதிலும் அறிவியல் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதை தவிர்க்க உருவாக்கப்பட்டதே புத்தாக்க அறிவியல் ஆய்வுத் திட்டமாகும். அதன்படி, பள்ளி மாணாக்கர்களிடையே இளம் வயதிலேயே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தல் மேம்படுத்துதல் மற்றும் அறிவியல்பால் ஈர்க்கும் திட்டமே இன்ஸ்பயர் விருது திட்டமாகும்.

இதில், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணாக்கர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணாக்கர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதனடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்து மாணாக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாணாக்கர்களுக்கும் தலா ரூ.10,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தங்கள் அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 142 பள்ளிகளின் சார்பாக 142 அறிவியல் படைப்புகள் சிறப்பான முறையில் மாணவ மாணவியர்களின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கு.பொ.கனகமணி சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...