யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீராவி எஞ்சினை மீண்டும் இயக்க முடிவு

யுனெஸ்கோவின் உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: யுனெஸ்கோவின் உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 



1918 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் உதகை மலை ரயில் பாதையில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட நீராவி எஞ்சின் (எண் 37384) இழுவை திறன் குறைந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு, மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த எஞ்சினுக்கு ஓய்வளிக்கப்பட்டு குன்னூர் மலை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில், உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பழமை வாய்ந்த புராதான முக்கியத்துவம் பெற்ற இந்த ரயில் எஞ்சின் பெருமையை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்வதோடு, பெருகிவரும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து, குன்னூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இந்த எஞ்சின் கொதிகலன் சோதனை செய்யப்பட்டு, இழுவை திறன் கண்டறியப்பட்ட பின்னர் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், சோதனை ஓட்டம் திருப்தியாக இருப்பின் ரயில்வே வாரிய ஒப்புதலுடன் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...