தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 160 கழிவறைகள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக கட்டிமுடிக்கப்பட்ட 160 கழிப்பறைகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கிரேண்ட் ரீகண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

கோவை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக கட்டிமுடிக்கப்பட்ட 160 கழிப்பறைகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கிரேண்ட் ரீகண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.



வார்டு எண் 16, 17, 18 மற்றும் 19-க்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளை, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றும் முயற்சியாக, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 160 கழிவறைகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் கட்டிமுடிக்கப்பட்டன. இந்த தனிக்கழிப்பறைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், மாநில நிர்வாக இயக்குனர் R. சித்தார்த்தன், கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயனிடம் ஒப்படைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தனிக்கழிப்பறைகளை கட்டித்தந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். இதையடுத்து, பேசிய மாநகராட்சி ஆணையாளர், பொதுமக்களின் தேவைக்கேற்ப நகரின் பெரும்பாலான இடத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் நூறு சதவிகிதம் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத, சுகாதாரமான நகரமாகக் கோவையை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், அதற்கு, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் மாநகராட்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



மேலும், கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...