பாரதியார் பல்கலை., துணை வேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்.8-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகியுள்ள பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரது ஜாமீன் மனு குறித்த விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகியுள்ள பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரது ஜாமீன் மனு குறித்த விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அப்பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரப்பட்டது. இதனை விசாரித்த கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...