நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சிகள் : அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு பெறும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் செய்யப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை : நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு பெறும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் செய்யப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால்  பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றது. குறிப்பாக, நீட் தேர்விற்கு மாணவர்களைத் தயார்படுத்த 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் போட்டி தேர்வை சந்திக்க தேவையான வசதிகளையும் ஏற்படுத்துவதோடு, மொபைல் ஆப் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பயிற்சி மையங்களில் 70,420 பேர் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டு, பென் டிரைவ் மூலம் பயிற்சி அளிக்கப்படும். 

2,000 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சென்னையில் 18 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெறும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்படுவார்கள். அதேவேளையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையில் மாற்றமில்லை. இருப்பினும், மத்திய அரசு கொண்டுவரும் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். நீட் தேர்விற்காக 412 மையங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி அளிக்கின்றது.

ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பள்ளிக் கல்வித்துறை வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றது. மேலும், "கனவு ஆசிரியர் விருது" பெறுவதற்கான காலஅவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கை  பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு, அமைச்சர் செங்கோட்டையன் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...