அரசின் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



திருப்பூரிலிந்து டிசம்பர் மாதம் 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் திருப்பூரிலிருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்து பக்தர்கள் மீது மோதியது. இச்சம்பவத்தில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு தலா ஒருலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு அறிவித்தது. 

இந்த நிலையில், பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

அந்த மனுவில், உயிரிழந்த குடும்பத்தினரை இதுவரை எந்தஒரு அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வழங்கவுள்ள ஒரு லட்சம் தங்கள் குடும்பத்திற்கு போதாது. ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டும். தங்கள் குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவினை அரசு ஏற்க வேண்டும். திருப்பூரிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடைமேடை அமைத்துத் தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு உடனே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...