பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடு : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச வழக்கில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக முனைவர் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச வழக்கில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக முனைவர் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர். 

கோவையில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், துணைவேந்தர் கணபதிக்கு பணம் பெற்று தந்ததாக அப்பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், துணைவேந்தர் கணபதி லட்சக்கணக்கில் பணம் பெற்று விதிமுறைகளை மீறி பணி நியமனங்கள் செய்து இருப்பதாகவும், அவற்றை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டுமென பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்த முனைவர் பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர். 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் கணபதி நியமித்ததாகவும், இந்த முறைகேடுகளில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவினர், தேர்வு குழுவினர், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு உண்டு எனக்கூறிய முனைவர் பட்டதாரிகள், முறைகேடுகளில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். மேலும், துணைவேந்தர் கணபதி நியமித்த பணி நியமனங்களை ரத்து செய்வதுடன், நேர்மையான முறையில் மீண்டும் தேர்வு நடத்தி தகுதியான நபர்களுக்குப் பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...