வால்பாறையில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற 6 பேருக்கு அபராதம் விதித்தது வனத்துறை

வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றியை வலை வீசிப் பிடித்து வேட்டையாடி முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றியை வலை வீசிப் பிடித்து வேட்டையாடி முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். 

வால்பாறை டோபி காலணி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சோலையார் எஸ்டேட் பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்வதாக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்தத் தகவலின் பேரில் வானவர் ஆனந்தன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, வலை வீசி காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்த வெள்ளிங்கிரி-யையும், அவரது நண்பர்களான ராமர், சரவணன், சிவக்குமார், பெரியசாமி, செந்தில் ஆகிய 6 போரையும் பிடித்தனர். 

இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக அவர்கள் 6 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...