நீலகிரியின் புகழை உலகிற்கு கூறும் கற்பூர மரங்களை பாதுகாக்க வேண்டும்: தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு?

கற்பூர மரங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் மண் வளத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பைனீஸ் போன்ற ஒவ்வாத மரங்களை அகற்ற வனத்துறை மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் முதுகெலும்பாகத் தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, மலை தோட்ட காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றது. இவற்றைத் தொடர்ந்து, உலகளவில் புகழ் பெற்ற நீலகிரி தைலம் உற்பத்தி இம்மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக உள்ளது.

கற்பூர மரம்

கற்பூர மரம் என்பது 'மிர்டேசியே' என்ற குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளை தாயகமாக கொண்ட இந்த தாவரம் ஆங்கிலேயர்களால் 1843-ம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும் எரிபொருள் மர வகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், மரக்கூழ் தொழிற்சாலை தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிடப்பட்டது. தற்போது, அதன் இலைகளை உலர வைத்து தைலம் தயாரிக்கவும் இம்மரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி தைலம் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்ய ஏதுவாக தொழிற்சாலைகள் அமைத்துச் செயல்பட அரசு மானியம் வழங்கி வருகிறது. அவ்வாறு, அரசு மானியத்துடன் நவீன முறையில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் கிலோ இலைக்கு 5 லிட்டர் வரை தைலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரம்

இத்தொழிலை நம்பி கடந்த 40 வருடங்களுக்கு முன்பு 200 பேர் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 50 பேர் மட்டுமே இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதிகளில் உதிர்ந்து விழும் கற்பூர இலைகளைச் சேகரிக்கும் தொழிலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். உதிர்ந்த இலைகளைச் சேகரித்து கொடுக்கும் இவர்களுக்குக் கிலோ ஒன்றுக்கு 12 முதல் 15 ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது. இந்த வருவாயை வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.



இத்தொழிலை நம்பி வாகன ஓட்டுநர்கள், தைல உற்பத்தியில் பணிபுரியும் தொழிலாளர்கள் என பல பேர் உள்ளனர். உலகளவில் புகழ் பெற்ற நீலகிரி தைலம் சந்தைகளில் அதிகளவு விற்பனையில் உள்ள நிலையில் 1 லிட்டர் நீலகிரி தைலம் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. 

இந்த தைலம் குறிப்பாக வைரஸ் காய்ச்சல், இரும்பல், சளி, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களுக்கும் நிவாரணியாகத் திகழ்ந்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி தைலத்தை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

கோரிக்கை

சீனாவில் இருந்து தைலங்கள் மலிவு விலையில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால், நீலகிரி தைலம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரி தைலத்தில் சீனா தைலங்கள் கலக்கப்படுகின்றன. இதனால், நீலகிரி தைலத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இம்மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாகக் கூறி கற்பூர மரங்களை நீலகிரி மாவட்டத்தில் இருந்து அகற்ற வனத்துறையினர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர். இந்தப் பரிந்துரையினால், தைலத் தொழிலை நம்பி வாழும் பல பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டத்தின் பெருமையை வெளி நாட்டுச் சந்தை வரை பிரபலப்படுத்தியுள்ள இந்த கற்பூர மரங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் மண் வளத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பைனீஸ் போன்ற ஒவ்வாத மரங்களை அகற்ற வனத்துறை மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...