”ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை வளையத்தில் நடிகர் ஆதி மற்றும் சிவசேனாபதி”

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி மற்றும் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோரை விசாரணைக்கு அழைக்க இருப்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கோவை : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி மற்றும் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரை விசாரணைக்கு அழைக்க இருப்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவையில் ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் மூன்று நாட்கள் கோவையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இன்றைய விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, கூறியதாவது, கோவையில் 20 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 12 பேர் மட்டும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. கோவையில் மொத்தம் 50 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதில் 35 பேர் ஆஜராகியுள்ளனர். இனிமேல் ஆணையம் விசாரிக்க விரும்பும் சிலருக்கு மட்டும் சம்மன் அனுப்பப்படும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட கார்த்திகேய சிவசேனாபதி, நடிகரும், இசையமைப்பாளருமான ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றனர். கோவையில் உதவி ஆணையர் ரமேஷ்குமார் நேற்று 5.30 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அடுத்ததாக, மதுரையில் விசாரணை நடத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதை முன்நின்று நடத்திய, வாக்குறுதிகள் கொடுத்த சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கின்றனர். 

மேலும், சென்னையில் ஆட்டோக்களுக்கு தீ வைக்கும் பெண் காவலர் யார் என்றே தெரியவில்லை என போலீஸ் உயர்அதிகாரிகள் தற்போது வரை கூறி வருகின்றனர். இது, தீவைத்த பெண் காவலரை மறைப்பதாகவே தெரிகின்றது.  போலீஸாரிடம் விசாரணை நடத்தும் போது அவர்களிடம் இது குறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...