இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்

கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது.

கோவை சுப்பிரமணிய பாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் முபாரக், சுபைர், சதாம் உசேன், அபுதாகீர் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில், அபுதாகீர் தற்போது ஜாமீனில் உள்ளார்.

2016-ம் ஆண்டு அப்துல் ஹக்கீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலனி பகுதியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இந்து முன்னணி சசிகுமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், சசிகுமார் கொலைக்கு பின்னணியில் அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்க வாய்ப்பிருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது. 

ஐதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி குமார் தலைமையில் கோவையில் முகாமிட்டுள்ள அதிகாரிகள், சசிகுமார் கொலை குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். புதிதாக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள முபாரக், சதாம் உசேன், சுபைர் ஆகியோரையும் இவர்களுக்கு உதவிய அபுதாகீரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

கொலை நடந்து ஓன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சசிகுமார் கொலை வழக்கை, தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கும்தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து இருப்பதால், இந்த வழக்கில் பல திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...