விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு என்பது கண் துடைப்பு நாடகம் - பி.ஆர் பாண்டியன்

கோவை:  பயிர் சேதங்களுக்கு நஷ்ட ஈடு வழங்காமல், விவசாயத்திற்கு நிதி ஒதுக்குவது என்பது கண்துடைப்பு நாடகம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு தனது கடைசி முழுமையான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்து முடித்த இந்த பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விவசாயத்திற்கு நிதி இதுக்குவது என்பது கண்துடைப்பு நாடகம் என்று என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் விமர்சித்துள்ளார். 

இது குறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " விவசாயத்திற்கு பணம் ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம். விவசாய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. நதிகளை தேசிய மயமாக்காமல் நதிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லை. 

நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் விவசாயம் செழிக்காது. மேலும், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடு வழங்காதது கண்டிக்கத்தக்கது. இந்த பட்ஜெட் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் தரும்." என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...