நடிகை ஸ்ருதி உள்ளிட்ட மூவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

நடிகை ஸ்ருதி உள்ளிட்ட மூவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை : நடிகை ஸ்ருதி உள்ளிட்ட மூவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த பால முருகன் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 41 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய சென்ற போது, காவல் துறையினரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து கடந்த 2016 ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மென்பொறியாளர் சந்தோஷ்குமார் என்பவரிடம் 43 இலட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஸ்ருதி, சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரை காவல் கைது செய்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மூவரையும் ஆஜர்படுத்தபட்டனர். 3 பேரையும் வருகின்ற பிப்ரவரி 14 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 3 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஸ்ருதி உள்ளிட்ட மூவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் அனுமதி அளித்து, மூவரையும் வரும் 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...