வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்: மாநில தேர்தல் ஆணையர் பங்கேற்பு

உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கோவை: உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்யும் முறை தற்போது நடைபெற்று வருகின்றது. வார்டுகள் மறுவரையறை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கான மண்டல அளவிலான கூட்டம் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் கருத்துக்களை மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், எல்லை மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் ராஜசேகர், நகராட்சிகள் நிர்வாக ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் கேட்டறிந்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என தனித்தனியே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், எல்லை மறுவரையறை கருத்துகேட்பு கூட்டம் அந்தந்த மாவட்டங்களில், பெயரளவிற்கு நடத்தப்பட்டதாகவும், இப்போது, மண்டல அளவிலான கருத்துகேட்பு கூட்டத்திலாவது, பொதுமக்களின் முறையான கருத்துக்களை பதிவு செய்து சீர்ப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...