மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றவரால் பரபரப்பு

வீட்டின் முன்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த நபர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வீட்டின் முன்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த நபர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருபவர் காஜா ஹூசைன். தள்ளு வண்டி வியாபாரம் செய்து வரும் இவரது வீட்டின் முன்பு சிலர் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டின் முன்பு ஆட்டோ ஸ்டாண்டு அமைந்திருப்பதால் இடையூறு ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்ற வேண்டும் என்றும் ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகளிடம் காஜா ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும், இதனால் தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்யும் தனது தொழில் பாதிக்கப்படுவதாகவும் கூறி இன்று காலை மண்ணெண்ணெய் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் காஜா ஹூசைனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

பொதுவாக, குறைதீர்ப்பு கூட்ட நாட்களின் போது ஆட்சியர் அலுவலகம் வரும் மக்களை முழுமையாக பரிசோதித்த பிறகே அவர்களை போலீசார் அனுமதித்து வந்தனர்.

இந்த நிலையில், நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் மறுவரை ஆணைய மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த பாதுகாப்புகளை மீறி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...