”கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்கக் கூடாது”

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்கக் கூடாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை : கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்கக் கூடாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்க 7 முதல் 10 டி.எம்.சி. காவிரி தண்ணீர் அவசர தேவைக்காக கர்நாடகாவிடம் கேட்டுள்ளோம். மேலும், கர்நாடகாவிடம் காவிரி நீர் கேட்பது நமது உரிமை. காவிரி நடுவர்மன்ற தீர்ப்புபடி கொடுப்பது கர்நாடக அரசின் கடமை. தமிழக அரசின் சில திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை. தமிழகத்திற்கு இந்த மத்திய பட்ஜெட்டில் முழுமையாக நிதி ஒதுக்குமென எதிர்பார்க்கிறோம். 

திராவிட இயக்கத்தை தவிர தமிழகத்தில் வேறுயாராலும் காலூன்ற முடியாது. இதன்மூலம், மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கப் பங்களிப்பு தமிழக மக்களின் வாழ்வில் ஒருங்கிணைந்து இருக்கிறது. தேசிய கட்சிகள் தங்களை நிலை நிறுத்தப் பணிகளை அரசியல் ரீதியாக செய்யவில்லை. 

தேனி நியுட்ரினோ ஆய்வக திட்டம் தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு விளக்க வேண்டும். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்க கூடாது. முதலமைச்சரும், தானும் டெல்லி செல்லும் ஒவ்வொரு முறையும் பிரதமரிடம் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். ஆயிரம் பேருந்து வழித்தடங்களை தமிழக அமைச்சர்கள் வாங்கியிருப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கூறியிருப்பது, ஆதாரமற்ற உண்மை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...