வால்பாறை கருமலை எஸ்டேட்டில் காட்டெருமை தாக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு

வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி காட்டு எருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.


வால்பாறை: வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி காட்டு எருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வால்பாறை அடுத்துள்ள தேயிலை எஸ்டேட் பகுதி மற்றும் அதிகரித்து வரும் குடியிருப்புகளால் வன விலங்குகளுக்கான வாழ்விடம் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், வனப்பகுதிகளை ஆக்கிரமித்தும் ஆங்காங்கே விடுதிகள் கட்டப்பட்டு வருவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் வன விலங்குகள் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், இன்று கருமலை எஸ்டேட் பகுதியில் வீட்டின் முன்புறம் துணி துவைத்துக் கொண்டிருந்த சீதாலட்சுமி (62) என்னும் மூதாட்டியை அங்கு வந்த காட்டெருமை தாக்கியுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த சீதாலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கருமலை தோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.



அங்கு சீதாலட்சுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வால்பாறை வனத்துறை மற்றும் வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னதாக, இதே கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுச்சாமி என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று காட்டெருமை தாக்கி சீதாலட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளது கருமலை எஸ்டேட் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...