தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை- முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேட்டி

தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், போக்குவரத்துத் துறையும் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வருகிறது என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

நீலகிரி, ஜனவரி 29

தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், போக்குவரத்துத் துறையும் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வருகிறது என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளையோ அல்லது அடுத்த மாதமோ எப்பொழுது வேண்டுமானாலும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. ஒவ்வொரு அமைச்சரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு திட்டங்கள் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால், நீட் தேர்வில் நமது உரிமையை விட்டுக் கொடுத்து விட்டோம்.

கதிராமங்கலம், நெடுவாசல் போன்ற பிரச்சனைகளில் தங்களது உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டோம். காவிரி பிரச்சனையில் நமது உரிமையைப் பெற முடியாத சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அதிமுக அமைச்சர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகும்.

போக்குவரத்து பேருந்துகளின் அவல நிலை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. ஒரு இயக்கம் என்பது புதிய பேருந்துகளை வாங்கி இயக்குவது அல்லது பழைய பேருந்துகளைப் பராமரிப்பதாக உள்ளது. தமிழக அரசு முதலமைச்சர் கப்டுப்பாட்டில் இல்லை. அதேப் போல தான் போக்குவரத்துக் கழகமும் கட்டுப்பாட்டினை இழந்து செயல்பட்டு வருகிறது. 

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்வரும் 31-ம் தேதியன்று கூடலூரில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...