அன்னூர் அருகே பெண்ணை கொன்று நகை, பணத்தைக் கொள்ளையடித்த வட மாநில கும்பல்- தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

அன்னூர் அருகே பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வட மாநில கும்பலை பிடிக்க ஈரோடு மாவட்டத்திற்கு தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

கோவை, ஜனவரி 29

அன்னூர் அருகே பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வட மாநில கும்பலை பிடிக்க ஈரோடு மாவட்டத்திற்கு தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மயில்சாமி (55). இவரது மனைவி ராஜாமணி (48). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ள நிலையில் இருவரும் தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீடு விரிவாக்கப் பணிக்காக பணிகள் மேற்கொண்டு வரும் இவர்களது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக மூன்று வடமாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் இரவு பணி மேற்கொள்ள வேண்டும் என வீட்டின் உரிமையாளர்களான ராஜாமணி மயில்சாமி தம்பதியினரிடம் கூறியுள்ளனர்.

பின்னர், இரவு டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்ட வட மாநில தொழிலாளர்கள் மூவரும் இரவு 12 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணியை கதவைத் தட்டி எழுப்பி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுக்க ராஜாமணி வீட்டினுள் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற தொழிலாளர்கள் அவரை ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மயில்சாமியை கட்டிவைத்து அவருக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு ராஜாமணியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து வீட்டில் போட்டுள்ளனர். மின்சாரம் பாய்ந்த வலியில் மயில்சாமி அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்த போது வட மாநில கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயில்சாமியை மீட்ட கிராம மக்கள் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி உத்தரவின் பேரில் ஒரு கூடுதல் கண்காணிப்பாளர், 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் என 10 பேர் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

இதனிடையே, பெண்ணை கொலை செய்த வட மாநில கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஈரோட்டுக்குச் சென்றுள்ள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...