சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் : பிரதமர் மோடி

சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 29

சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்கும். அதிலும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக இருக்கும். 

பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியமானது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு மிக கவனமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது. உலக வங்கி, ஐஎம்எப் போன்ற அமைப்புக்களும் இந்தியாவின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளன. 

கிராமப்புற இந்தியா, விவசாயிகள், தலித்துகள், பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனை மனதில் கொண்டு பட்ஜெட் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற குழுக்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...