மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று துவக்கம்

தமிழ்நாடு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.

கோவை, ஜனவரி 29

தமிழ்நாடு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.



இந்த கலைப் பயணத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கங்கை கருங்குயில்கள் கலைக் குழுவினர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளனர். 60 பேர் கொண்ட இந்தக் குழுவினர் மூன்று அணிகளாகப் பிரிந்து இருகூர், சிங்காநல்லூர், பட்டணம், காமநாயக்கன்பாளையம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.



30 நாட்கள் நடைபெறும் இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.



இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கொடியசைத்து பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...