உதகையில் 16-வது ரோஜா கண்காட்சிக்கான செடிகளை கவாத்து செய்யும் பணி தொடக்கம்

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்க இருக்கும் 16-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

நீலகிரி, ஜனவரி 29

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்க இருக்கும் 16-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

 இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சீசனின் போது வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிவர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக துவக்கப்பட்ட ரோஜா பூங்காவில் மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும். 

 இந்நிலையில், இந்தாண்டு கோடை சீசனுக்காக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காவிலும் மலர் நாற்றுகள் நடவு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நூற்றாண்டு உதகை ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இந்த ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

16வது ரோஜா கண்காட்சி இந்த ஆண்டு மே மாதத்தில் துவங்க உள்ளதால் ஏப்ரல் மாதம் முதல் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குவதற்கு 30 ஆயிரம் ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் இன்று துவங்கியது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...