பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.



ஜனவரி 28

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக அரசு பேருந்துக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக ஆளும் அதிமுக அரசைக்கண்டித்து நாடுமுழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், எதிர் கட்சியினர் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கட்டண உயர்வை குறைத்து தமிழக அரசின் சார்பில் இன்று செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனைத்து நிலைகளிலும் பேருந்து கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. சொகுசு பேருந்துகளில் கி.மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது.

விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30கி.மீ வரை கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.85ஆக குறைக்கப்படுகிறது.

புறவழிச்சாலை பேருந்துகளில் 30 கிமீ கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.85ஆக குறைக்கப்படுகிறது. குளிர்சாதனப் பேருந்துகளில் 30கி.மீ வரை கட்டணம் ரூ.140ல் இருந்து ரூ.130ஆக குறைக்கப்படுகிறது.

மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.4 மற்றும் அதிகபட்சக் கட்டணம் ரூ.18ஆக இருக்கும். இந்த கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து கட்டணக் குறைவு காரணமாக நாளொன்றுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...