முதல்முறையாக நீலகிரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து வசதி

நீலகிரியில் அதிகரட்டி அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன், தனியார் பள்ளிகளைப் போல சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீலகிரி, ஜனவரி 27

நீலகிரியில் அதிகரட்டி அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன், தனியார் பள்ளிகளைப் போல சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 



தற்போது, ஆங்கிலவழி கல்வி மோகத்தில் அரசு பள்ளிகளை பெற்றோர் தவிர்ப்பதால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைய தொடங்கி, காலப்போக்கில் பள்ளிகள் மூடுவிழா கண்டு வருவது வேதனை அளிக்கிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி கிராமத்தில் கடந்த 1852-ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க இந்த ஆரம்ப பள்ளியில் கடந்த ஆண்டு 12 மாணவர்களாகக் குறைந்து காணப்பட்டது. 

இதனையடுத்து, இந்தப் பள்ளி மூடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், அந்தப் பள்ளியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் உறுதுணையாக செயல்பட்டு அரசு பள்ளியில் ஆங்கிலவழி கல்வியை கொண்டு வந்து, அதற்காக ஆசிரியைகளை நியமித்து ஊதியமும் வழங்க முன் வந்துள்ளது. மேலும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் சுற்றுவட்டார கிராமங்களான மணியட்டி, முட்டிநாடு, நுந்தளா, காத்தாடி மட்டம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வர ரூ. 17 லட்சம் செலவில் பள்ளி பேருந்து ஒன்றை வாங்கி இலவசமாக இயக்கி வருகிறது.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 135 மாணவர்களாக உயர்ந்துள்ளதால் அதிகரட்டி கிராம மக்கள் தங்கள் பள்ளியை தக்கவைத்துள்ளனர். ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகளை அந்தந்த கிராமமக்கள் ஊக்குவித்தாலே சிறப்பாக இருக்கும் என்பதற்கு அதிகரட்டி பள்ளியே சான்றாக உள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...