பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும் : ஹேமங் பதானி

பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

நீலகிரி, ஜனவரி 27

பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார். 

உதகை தனியார் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியாதாவது, அயல்நாடுகளில் இந்திய அணி சிறப்பாகத் தான் விளையாடி வருகிறது. தென் ஆப்ரிக்கா தொடர் மிகவும் கடினமானது. முதல் இரண்டு டெஸ்ட்களிலும் இந்தியா மோசமாக தோற்கவில்லை. ஒரு சில கேட்சுகளை தவறவிடாமல் பிடித்திருந்தாலும், பேட்டிங் சிறப்பாக செய்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்கலாம். கடை டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல வாய்ப்பு உள்ளது.

வெளிநாடுகளில் காலநிலை, சூழ்நிலை வேறு மாதிரியானது. விளையாட்டு வீரர்கள் அதற்கேற்ப மாறுவதற்கு நேரம் தேவைப்படுகிறது. தென் ஆப்ரிக்கா செல்வதற்கு முன் இந்திய வீரர்களுக்கு நன்கு பயிற்சி எடுக்க நேரம் இல்லாததால் தான் தோற்றது. இந்திய அணியில் சிறந்த வீரர்கள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த நேரத்தில் யார் சிறந்த முறையில் விளையாடினார்களோ அவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டு வீரர்கள் மட்டுமல்ல, சிறப்பாக விளையாடும் யாரும் இந்திய அணியில் இடம் பெறலாம். ஐபிஎல் போட்டிகள் இந்தியா இளம் வீரர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. கோலி மற்றும் தோனி வெவ்வேறு திறனை கொண்டவர்கள். தோனி எந்த உணர்ச்சியும் காட்டமாட்டார். கோலி மைதானத்தில் ஆக்ரோஷமாக இருப்பார்.

பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும். வெளிநாடுகளில் இருப்பது போன்று வேக பந்திற்கு சாதகமான மைதானங்கள் இந்தியாவில் உருவாக்க முடியாது. இங்கு மண்ணின் தன்மை வேறு. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...