கோவையில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை, ஜனவரி 27

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 

செட்டிப்பாளையம் எல்.என்.டி. பைப்பாஸ் சாலை அருகில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜன., 28) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை இன்று மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நேரில் பார்வையிட்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை மாவட்டம், செட்டிப்பாளையம் எல்.என்.டி. பைப்பாஸ் சாலை அருகில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நாளை காலை 08.00 மணியளவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றம் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்து பேரூரையாற்றவும், சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்புரையாற்றவும் உள்ளனர். இதில், கோவை மாவட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.  

செட்டிப்பாளையம் எல்.என்.டி. பைப்பாஸ் சாலை அருகில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி     வருகை தந்து, பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கண்டுகளிக்க பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு வாகனம் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார்  நிலையில் உள்ளது. மேலும், தற்காலிக கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஜல்லிக்கட்டு விளையாட்டில் கலந்துகொள்ள சுமார் 500 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் அனுமதிக்கப்படும். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு கூறினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஹிரிஹரன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் லெட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி, இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சந்திரசேகர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...