பேருந்து கட்டண உயர்வை கண்டித்து உதகையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

நீலகிரி, ஜனவரி 27 

நீலகிரி மாவட்டத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்தும், மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தி.மு.க. மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...